எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி வழங்க தமிழக அரசு சிறப்பான ஏற்பாடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்துகிறது. பல்வேறு பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
மிகவும் கடினமான இந்த தேர்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், எஸ்.சி, எஸ்.டி சமூக மாணவர்கள் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக தமிழக அரசு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் 100 பேருக்கு யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்க தமிழ்நாடு TAHDCO நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இப்பயிற்சிக்கு தகுதி பெற மாணவர்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தோவு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும். தகுதி பெறும் தேர்வர்களின் முழு செலவை TAHDCO ஏற்றுக் கொள்ளும். இத்திட்டத்தில் சேர tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“