மத்திய இடைநிலை கல்வி வாரியம் ( Central Board of Secondary Education (CBSE)) மற்றும் National Council of Educational Research and Training (NCERT) பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'Tamanna' aptitude test விரைவில் நடத்தப்பட உள்ளது.
CBSE மற்றும் NCERT பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் இந்த 'Tamanna' (Try and Measure Aptitude and Natural Abilities) aptitude test அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுமுறையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் aegis பிரிவு உருவாக்கியுள்ளது.
இந்த தேர்வு முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் முறை, நிர்வாகம் உள்ளிட்ட விபரங்களுக்கான 'Tamanna' என்ற பெயரில், தனியாக அதிகாரப்பூர்வ இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை, நாடு முழுவதிலும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 17 ஆயிரம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'Tamanna' தேர்வின் பாடத்திட்டம்
'Tamanna' aptitude test ஏழு பாடப்பகுதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Language Aptitude (LA), Abstract Reasoning (AR), Verbal Reasoning (VR), Mechanical Reasoning (MR), Numerical Aptitude (NA), Spatial Aptitude (SA) and Perceptual Aptitude (PA) உள்ளிட்ட பாடப்பகுதிளோடு தொழில்நுட்ப கையேட்டில் குறிப்பிட்டுள்ளவையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள சோதனை கையேட்டில், இந்த தேர்வின் கட்டமைப்பு, தரம், பாடப்பகுதிகள், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பங்கு உள்ளிட்ட விபரங்கள் அடங்கியுள்ளன.
official website of 'Tamanna'.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதுகுறித்து கூறியுள்ளதாவது, ஒவ்வொரு மாணவனும் உயரம், எடை, நிறம் போன்ற காரணிகளால் மட்டும் வேறுபடுவது இல்லாமல், ஒவ்வொரு மாணவனுக்கும் பிரத்யேக தனித்திறமைகள் உள்ளன. இந்த திறமைகள் வெளிக்கொணரும் வகையிலேயே பாடத்திட்டங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.