CBSE 12th Exam Result Update : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு வெளியான இந்த தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in. ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும், எஸ்எம்எஸ், உமாங் ஆப் மற்றும் டிஜிலோகர் ஆகியவற்றின் வழியாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களின் வகுப்புத்தேர்வின் செயல்பாடு, 11-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பாடத்தின் மதிப்பெண்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேரடி வகுப்புகளுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பாடப் பிரிவுகள் அல்லது இடைநிலைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களிலிருந்து 40%, அவர்களின் 11 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களிலிருந்து 30% கணக்கிடப்படும். மற்றும் அவர்களின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளிலிருந்து 30% கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முறையில் மதிப்பீடு செய்யப்பட்ட சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடப்பு ஆண்டு, 99.37 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்., இது முந்தைய ஆண்டை (88.8 சதவீதம்) விட கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த 2019 ல் 83.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் நடப்பு ஆண்டில் சுமார் 65,184 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்வில்லை. அவர்களின் முடிவு இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகவும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிபிஎஸ்இ அவர்களின் முடிவை அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டு முறையில், பெறும் மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதன்படி மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் தேர்வு அறிவிக்கப்பட்ட பிணன்னர்நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கு அமர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பிற்கு, இறுதி தேர்வுகள் இல்லாமல் மாணவர்களை மதிப்பீடு செய்ய சிபிஎஸ்இ ஒரு மாற்று யுக்தியை பின்பற்றியுள்ளது. சிபிஎஸ்இ மதிப்பீட்டு மூலோபாயத்தின்படி, ஒவ்வொரு பாடத்திற்கும் 20 மதிப்பெண்கள் உள் மதிப்பீட்டிற்காக இருக்கும், ஆண்டு முழுவதும் பல்வேறு சோதனை தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 80 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil