scorecardresearch

போலியாக பி.எட், டெட் தேர்ச்சி இன்மை… புதுவையில் 4 ஆசிரியர்கள் பணி நீக்கம்

போலி பி.எட். சான்றிதழ் கொடுத்து புதுச்சேரியில் 8 ஆண்டுகள் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் பணி நீக்கம்

Puducherry
புதுவை செய்திகள்

பாபு ராஜேந்திரன்  புதுச்சேரி

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் போலி சான்றிதழ் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 4 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் முகமது யாகூப். B.A.,M.A. B.Ed முடிந்துள்ள இவர் 2006 ம்  ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை கல்வி துறையின் மூலம் விரிவுயாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார். அப்போது கல்வி துறையில் சமர்பித்த சான்றிதழ்களில் பி.எட். படிப்பை 1998-2000ல் விசாகப்பட்டினத்தில் முடித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் விசாரணையில் 2003 ல் தான் (Dr.L.B.கல்லூரி) அந்த கல்லூரியில் B.Ed. துவங்கப்பட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து போலி பி.எட். சான்றிதழ் கொடுத்து புதுச்சேரியில் 8 ஆண்டுகள் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய முகமது யாகூப் பணி நீக்கம் செய்து கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே போல் ஏனாம் பகுதியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களான தனலட்சுமி, வெங்கடலட்சுமி, சந்தோஷி ஆகியோர் நீதிமன்ற உத்தரவுபடி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ம் ஆண்டில் பணியில் சேர்ந்துள்ள இவர்கள் TET(ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வை குறிப்பிட காலத்திற்குள் முடிக்காத காரணத்தினால் கல்வி துறை ஏற்கனவே தற்காலிக நீக்கம் செய்திருந்த நிலையில் தற்போது பணி நீக்கம் செய்து கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

போலி  சான்றிதழ் தயாரித்து ஆசிரியர் வேலை பெற்ற மேற்படி நபர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு ஏனாம் கல்வித் துறை டிடி நிர்வாகம் வெர்பினா ஜெயராஜுக்கு வந்தது. ஏனாம் பள்ளிக் கல்வி இயக்குநரின் பிரதிநிதி பாம்பன லட்சுமண பிரவீன் இந்தத் தகவலை உறுதி செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamil 4 teachers dismiss for fake certificate and tet exam fail in puducherry

Best of Express