மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் 549 வகை அமைப்புகளின் கீழ் காலியாக உள்ள 5369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் பெரும்பாலான பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மெட்ரிக் படிப்பு முடித்திருந்தால் போதுமானது.
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குருப் 4 தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பல தேர்வர்கள் தங்கள் எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், டிஎன்பிஎஸ்சி அடுத்த தேர்வு அறிவிப்பு நடப்பு ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்புக்கான தேர்வு அடுத்த வரும் தொடக்கத்தில் தான் நடைபெறும் என்பதால், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த பலரும் மத்திய அரசின் எஸ்.எஸ்.சி (SSC), ரயில்வே (RAILWAY), வங்கி (BANKING) மத்திய (UPSC), இராணுவம் (DEFENCE) போன்ற பல்வேறு போட்டித் தங்களை தயார்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். அவ்வாறு தயாராகி வரும் தேர்வர்களுக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC – ADVERTISEMENT NO. Phase-XI/2023/Selection Posts) வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5369 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான நாள் நாளையுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. இதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறை சார்ந்த அமைப்புகள் 549-ல் காலியாக உள்ள 5369 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதில் சுமார் 100-க்கு மேற்பட்ட வகை அமைப்புகளில் பட்ட படிப்பும், சுமார் 169 வகை அமைப்புகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பும், 280 வகை அமைப்புகளில் மெட்ரிக் படிப்பும் கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முறை
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி தொடங்கியது. அதன்படி நாளை (மார்ச் 27) நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ssc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
விண்ணப்ப கட்டணம்
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வகுப்பு பெண்கள் மற்றும் எஸ்சி/ எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
வயது சலுகை
மத்திய அரசின் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.சி./எஸ்.டி பிரிவினருக்கு 5 வயது வரை சலுகை அளிக்கப்படும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், நிர்ணையிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்களும் வயது சலுகை பெற தகுதி உடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை
கணிணிமுறை மூலம் நடத்தப்படும் இந்த தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும். தெற்கு மண்டலத்தின் வரும் ஜூன் ஜூலை மாதங்களில் 22 மையங்களில் இந்த கணிணி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். இதில் ஆந்திரா 11, பாண்டிச்சேரி 1, தமிழ்நாடு 8, தெலுங்கானா 3 ஆகிய பகுதிகளில் தேர்வு நடைபெறும்.
இந்த பணியிடங்களுக்கனான வயது, கல்வித்தகுதி, விண்ணப்பம் செய்லது எப்படி என்பது குறித்து எஸ்.எஸ்.சி விளம்பர அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுககாக தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகள் இலவசமாக வழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தொடர்புகொண்டு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/