மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு தேதி குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2025 இல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, எழுத்து தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 முதல் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சி.பி.எஸ்.இ குளிர்காலப் பள்ளிகளில் நவம்பர் 5 முதல் டிசம்பர் 5, 2024 வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும்.
2025 ஜனவரியில் மூடப்பட்டிருக்கும் இந்தக் குளிர்காலப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள் மற்றும் உள் மதிப்பீடுகளை நடத்துவதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOPகள்) மற்றும் வழிகாட்டுதல்களையும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு தேதி அறிவிப்புடன், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாட வாரியான மதிப்பெண் வினியோகத்தை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் இதை முழுமையாக மறுபரிசீலனை செய்து, நடைமுறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல் ஒரு முறை சமர்ப்பித்த மதிப்பெண்களை மாற்ற முடியாது என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் இரண்டையும் சுமுகமாக நடத்துவதற்கு பள்ளிகளுக்கு ஆதரவளிக்க, சி.பி.எஸ்.இ இரண்டு வகுப்புகளுக்கும் பாடங்களின் விரிவான பட்டியலை வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் வகுப்பு, பாடக் குறியீடு, பாடப் பெயர், கோட்பாட்டுத் தேர்வுகளுக்கான அதிகபட்ச மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுகள், திட்ட மதிப்பீடுகள், உள் மதிப்பீடுகள் மற்றும் எழுத்து தேர்வுகளில் பயன்படுத்தப்படும் விடைப் புத்தகத்தின் வகை போன்ற தகவல்கள் உள்ளன.
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு செய்முறை, தேர்வு அறிவிப்பு
இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், “10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள்/ IA மற்றும் வாரியத்தின் வருடாந்திர எழுத்து தேர்வுகள் முறையே 1 ஜனவரி 2025 தொடங்கும் என்றும், எழுத்து தேர்வு பிப்ரவரி 15-ந் தேதியும் தொடங்கும். சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளின் அறிவிப்பைப் பார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
தேர்வு அட்டவணை தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்
10-வது மதிப்பெண் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்
12-வது மதிப்பெண் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள க்ளிக் செய்யவும்
ஒவ்வொரு பாடத்திற்கும் மொத்தம் 100 மதிப்பெண்கள் இருக்கும் என்று சிபிஎஸ்இ உறுதி செய்துள்ளது, மேலும் எழுத்த மற்றும் செய்முறை தேர்வுகள், ப்ராஜெக்ட்கள் மற்றும் இன்டர்னல் மதிப்பீடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள பிரிவின்படி பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“