Anna University Allocation Issue: சென்னை அண்ணா பல்கலை கழகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கு இரு எம்.டெக் படிப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது ஏன் என்பது குறித்து வரும் மார்ச் 12-ந் தேதி அண்ணா பல்கலைகழகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டிய நிலையில், மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் நடத்தப்பட்ட எம்.டெக். கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி, எம்.டெக். பயோ டெக்னாலஜி, ஆகிய இரு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், பல்கலைகழகத்தில் அறிவிப்பை எதிர்த்து, சென்யை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இந்த இரு எம்.டெக். படிப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்த தமிழக அரசு இந்த இடஒதுக்கீடை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், அண்ணா பல்கலைகழகம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான சான்றிதழ்கள் கல்வி நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்க ஏதுவாகவும், மத்திய அரசின் வேலைவேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான நிலைபாட்டை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 இட ஒதுக்கீட்டையும் அறிமுகம் செய்தது ஏன்? என மார்ச் 12ம் தேதி விளக்கமளிக்கும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழக அரசு இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இரு எம்.டெக் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன் என்று, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"