12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து அவர்கள் எதிர்நோக்கும் கல்லூரி படிப்புக்காக சேலம் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் சிறந்த பொறியியல் கல்லூரின் குறித்த இந்த பதிவில் காணலாம்.
பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் அடுத்து கல்லூரி படிப்பை தொடர எந்த கல்லூரியில் சேரலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். இதில் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்வது ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வு. பொறியியல் பட்டபடிப்பில் சேர்வதற்கு கவுன்சிலிங் கட்ஆப் மார்க் என பல கட்டங்களை கடக்க வேண்டும்.
மாணவர்கள் பலரும் தங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்ய நினைப்பதும், இன்னும் பல மாணவர்கள் வெளியில் நகர பகுதிகளில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்ய நினைப்பார்கள். இந்த மாதிரியான யோசனையில் உள்ள மாணவர்களுக்கும், கட்ஆப் மதிப்பெண்களுக்கு வசதியாக சேலம் சுற்றுவட்டதரத்தில் உள்ள 6 மாவட்டங்களில் சிறந்த பொறியியல் கல்லூரிகளைபார்ப்போம்.
பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் முதலில் டாப் கல்லூரிகளை தேர்வு செய்து அதன் பட்டியலை வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று அதன் சூழ்நிலைகள், வெளிநாட்டு மொழிகள் கற்றுக்கொடுப்பது, வேலைவாய்ப்பு அலுவலர், வேலைவாய்ப்பு பயிற்சி, ஆகியவை இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்துகொண்டு அதன்பிறகு கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
அரசு பொறியியல் கல்லூரி சேலம் மாவட்டம். இந்த கல்லூரியில் கட்ஆப் மதிப்பெண் 174.7.
அரசு பொறியியல் கல்லூரி கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த கல்லூரியின் கட்ஆப் மதிப்பெண் 165.92
இந்தியன் இன்ஸ்யூட் ஆப் ஹேண்ட்ரூன் டெக்னாலஜி சேலம் மாவட்டம். இந்த கல்லூரியின் கட்ஆப் மதிப்பெண் 160.49. டெக்டைல் படிக்கதற்கு சிறந்த கல்லூரி. இந்த கல்லூரி மத்திய அரசின் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று கல்லூரிகளும் சேலம் ஷோனில் கட்ஆப் 160 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்.
சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி சேலம் மாவட்டம். கட்ஆப் மதிப்பெண் 158.15.
நாலேஜ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி சேலம் மாவட்டம் கட்ஆப் மதிப்பெண் 153.57
நரசூஸ் சாரதி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி சேலம் மாவட்டம் கட்ஆப் மதிப்பெண் 126.99
அரசு பொறியியல் கல்லூரி தர்மபுரி மாவட்டம் கட்ஆப் மதிப்பெண் 153.55
எம்.குமாரசாமி காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கரூர் மாவட்டம் கட்ஆப் மதிப்பெண் 152.70
விஎஸ்பி எஞ்சினியரிங் கல்லூரி கரூர் மாவட்டம். கட்ஆபர் மதிப்பெண் 142.60
அதியமான் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கிருஷ்ணகிரி கட்ஆப் மதிப்பெண் 135.10
விவேகானந்தா காலேஜ் ஆப் வுமன் நாமக்கல் மாவட்டம் கட்ஆப் மதிப்பெண் 144.15
கே.எஸ்.ரங்கசாமி காலேஜ் ஆப் டெக்னாலஜி நாமக்கல் மாவட்டம் கட்ஆப் மதிப்பெண் 142.07
பிஎஸ்என்ஏ காலேஜ் ஆப் எஞ்சினியரிங் திண்டுக்கல் மாவட்டம் கட்ஆப் மதிப்பெண் 157.11
இந்த கல்லூரிகளின் பட்டியலை வைத்துக்கொண்டு நீங்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பார்த்துவிட்டு அனைத்து விபரங்களையும் விசாரித்து தெரிந்துகொண்டு அதன்பிறகு தேர்வு செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil