Advertisment

வீடியோ : பள்ளிகளை திறப்பதே நல்லது – கல்வியாளர் கமல செல்வராஜ்

Educator kamala Selvaraj Interview : தமிழகத்தில் மாணவர்களின் தற்போதைய கல்வி நிலை குறித்து கல்வியாளர் கமல செல்வராஜ் கூறிய வீடியோ பதிவு

author-image
WebDesk
New Update
வீடியோ : பள்ளிகளை திறப்பதே நல்லது – கல்வியாளர் கமல செல்வராஜ்

Educator kamala Selvaraj Interview About School Education : இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிய கொரோனா தொற்று பாதிப்பு தறபோது வரை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது மறுப்பதற்கில்லை. இந்த தொற்று பாதிப்பினால் பல துறைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது கல்வித்துறை. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு கிடைக்கின்றனர். இதில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் அது அவர்களின் கல்வித்தரத்தை எந்த அளவிற்கு முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில், தற்போதைய சூழலில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 11 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் மதிப்பெண் பட்டியல் எதன் அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் என்று தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த சூழ்நிலை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுக்காக கல்லியாளர் கமல செல்வராஜ் அவர்களிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில் வகுப்பறை அனுபவத்தை எந்த ஆன்லைன் வகுப்புகளாலும் கொடுக்க முடியாது. தமிழகத்தில் இன்றளவும் பல கிராமங்களில் மின்சார வசதி இல்லாமல் உள்ளது. அப்படிப்பட்ட கிராமங்களில் இன்டர்நெட் வசதி கிடைப்பது சாத்திமில்லாத ஒன்று. இதனால் பின்தங்கிய மக்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் முழு பலனை கொடுக்காது.  இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வருவதால், பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள முக்கவசம அணிதல், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற செயல்களை பள்ளிகளில் பயன்படுத்த ஏராளமான வசதிகள் உள்ளதால், பள்ளிகளை உடனடியாக திறந்து மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை ஓரளவு திறம்பட நடத்தியுள்ளனர். இதில் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.  ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை சரியாக நடத்தினாலும்கூட பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் நிதி பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றனர் என கூறியுள்ளார்.

தொடர்ந்து 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் குறித்து பேசிய அவர், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதே போதும். அவர்களின் மதிப்பெண்கள் தேவையில்லை. அவர்கள் மேல்படிப்புக்கு செல்லும்போது அந்தந்த கல்வி நிறுவனங்கள் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்துகொள்வார்கள். அரசு கல்விக்கட்டணத்தை மட்டும் நிலையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான முழு பேட்டியும் வீடியோவில் காணலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu School Education Department Education News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment