Advertisment

தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு 2024: 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பம் தொடக்கம்

இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
School Student

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் இந்தாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, தேர்வுக்கான விண்ணப்ப பதிவு   செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 

Advertisment

ஆர்வமுள்ள மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.  செப்டம்பர் 19-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம். இந்த ஆண்டு தேர்வு அக்டோபர் 19-ம் தேதி நடக்கிறது. 

இந்தத் தேர்வின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து 1,500 மாணவர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். 

உதவித் தொகை பெற 50% அரசுப் பள்ளிகளிலிருந்தும், மற்ற 50% மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களின் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்வு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். 11-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment