11, 12ம் வகுப்புகளுக்கு இரண்டு வகை பாடத்திட்டங்கள்: பள்ளிக்கல்வித் துறை முடிவு

Tamil Nadu School News : 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களை இரண்டாகப் பிரிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது

கொரோனா வைரஸ் பொது முடக்க காலத்தை முன்னிட்டு, பல மாதங்களாக வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களை இரண்டாகப் பிரிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது

இதன்படி, மாணவர்குக்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டிய பகுதிகள் முன்னிரிமை பாடங்கள் எனவும், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்ளும் பகுதிகள் விருப்ப பாடங்களாகவும் பிரிக்கப்பட உள்ளது .

கொரோனா ஊரடங்கால் இழந்த நேரத்தை ஈடுசெய்யும் பொருட்டு, மாணவர்களின் பாடத்திட்டங்களை திருத்தியமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முயன்று வருகிறது. இதன் மூலம், மாணவர்களின் பாட சுமைகள் பெரிதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய தகவலின் அடிப்படையில்,30 முதல் 40 சதவீத பகுதிகள் விருப்ப பாடங்களாக மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.  முன்னதாக, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி வரும் 16ம் தேதி முதல் செயல்படும். மேலும், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

இதனைத்  தொடர்ந்து, ஸ்டேட் கவுன்சில் ஆப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரைனிங்  (எஸ்.சி.இ.ஆர்.டி) ஆசிரியர்களும்,பாட வல்லுநர்களும் அடங்கிய குழு, இந்த கல்வி ஆண்டிற்கு  முன்னுரிமை அளிக்கும் பாடப்பகுதிகளை  அடியாலும் பணியில் இறங்கியது.

நீட் நுழைவுத் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எனவே, நீட் போன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படுகின்றன என்று பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

முன்னதாக, கொரோனா பெருந்தொற்று முடக்க காலநிலையில் பள்ளியில் வழங்கப்படும் கல்வி போல, வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான பொருத்தமான வழிகாட்டு நெறிமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu 11th 12th schools syllabus split in to two syllabus

Next Story
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து: ஏன் தவிர்க்கிறது தமிழக அரசு?tnea admission 2020, tnea news, tnea counselling, tnea committee, engineering admissions, tamil nadu egineering admissions 2020, students most preferred which course, anna university engineering counselling, most preferred engineering course ict, தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020, டிஎன்இஏ, ஐசிடி, ஐடி, செயற்கை நுண்ணறிவு, Information and Communication Technology, Artificial Intelligence, electronics and communication or information technology, அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல், படிப்பு, tnea admission, anna university admission, anna university counselling, anna university admission 2020, tnea, tnea news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com