11-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் : வெள்ளிக் கிழமை வெளியாகிறது

11th exam results date announced : மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.

11th exam results date announced : மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu 10th exam results

Tamil nadu 10th exam results

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வரும் ஜூலை 31ம் தேதி, காலை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்தது.

Advertisment

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் ஜூலை 27 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும்" என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 11 ஆம் வகுப்பிறகான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் புதிய பாடத்திட்டம், வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், தொழிற்கல்வி, கணக்குப் பதிவியல், பழைய பாடத்திட்டம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்த்து. மேலும், 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் விதமாக  காலாண்டு,அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும்;  மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த, மதிப்பெண் பெட்டியல் வரும் ஜூலை 31ம் தேதி அன்று வெளியிடப்படுகிறது.

www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு  செய்து மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை அறிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்கள் கொடுத்த செல்போன் நம்பருக்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மதிப்பெண் பட்டியல்:  

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

How to check TN Plus 1 results: தமிழ்நாடு பிளஸ் 2 ரிசல்ட்

அதிகாரப்பூர்வ தளமான www.tnresults.nic.in ,  www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in ஐ விசிட் செய்யவும்.

அங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.

பதிவெண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

இதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu School Education Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: