இன்று மாலை ப்ளஸ் டூ ரிசல்ட்: 9 லட்சம் மாணவர்களின் எதிர்பார்ப்பு

12th Board Exam Result Date 2020: இன்று மாலை 5 மணியளவில்  12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

By: Updated: July 7, 2020, 03:54:36 PM

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு விடை தெரியவந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில்  12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரையில் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். கொரோனா ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக, கடந்த மே 27ம் தேதி முதல் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கொரோனா பெருந்தொற்று  காலத்தில், சமூக விலகல் நெறிமுறையை கடைபிடிக்கும் விதமாக 202 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில்,” 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியானது நிறைவடைந்ததாகவும், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணியானது 10 நாட்களுக்குள் நிறைவடையும் ”  என்றும் தேர்வுத் துறை தெரிவித்தது.

இதனால், ஜூன் 20 தேதி வாக்கில் தேர்வு எழுதாத மாணவர்களைத் தவிர்த்து  பிற மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

இதற்கிடையே,  கடந்த ஜூன 18ம் தேதி ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ” ஜூலை முதல் வாரத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்”  என்று தெரிவித்தார். எனவே, அமைச்சர் அறிவித்தப்படி இன்று (அ) நாளை 12ம் வகுப்பு தேர்வுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இருப்பினும், பள்ளிக்கல்வித்துறை தொடர்புடைய அதிகாரிகள் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் சில கால தாமதம் ஏற்படலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், ” கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக  24.03.2020 அன்று நடைபெற்ற +2 தேர்வில் 36,842 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இத்தகைய மாணவர்களுக்கு ஒரு மாற்று  தேதியை குறிப்பிட்டு அவர்களும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டார். மேலும், ஜூன் 4ம் தேதி  அத்தேர்வினை எழுத வாய்ப்பளிக்கப்பட இருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார் . இருப்பினும்  கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக இன்னும் அந்த குறிப்பிட்ட தேர்வை நடத்த முடியவில்லை.  எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை  தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

எனவே, இன்று மாலை  அனைத்து தேர்வுகளையும் எழுதிய மாணவர்களுக்கு மட்டும் ரிசல்ட் வெளியிடப்படுகிறது.  மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களான tnresults.nic.indge.tn.gov.in, dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் ரிசல்ட்டைப் பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu 12th result 2020 date 12th result website 12th result dge tn gov in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X