Advertisment

இன்ஸ்டன்ட் மிக்ஸ், ப்ரவுனி தயாரிக்க சென்னையில் பயிற்சி; வேளாண் பல்கலை. அழைப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் இன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவுப் பொருட்கள் மற்றும் ப்ரவுனி தயாரிக்க செயல்முறை பயிற்சி வகுப்பு; சென்னையில் 2 நாட்கள் பயிற்சி; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

author-image
WebDesk
New Update
Kovai TNAU

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

இன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறை குறித்து அறிந்துக் கொள்ள விரும்புவோர்களுக்கு அருமையான வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வருகின்ற டிசம்பர் 18 ஆம் தேதி இன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவு பொருட்களை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில், ரவா இட்லி மிக்ஸ், வெங்காய ரவா தோசை மிக்ஸ், சேமியா பாயாசம் மிக்ஸ், பஜ்ஜி மிக்ஸ், அரிசி உப்மா மிக்ஸ், அடை மிக்ஸ், மசாலா வடை மிக்ஸ், புளியோதரை மிக்ஸ் ஆகியவற்றை தயாரிப்பது தொடர்பாக செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.

Advertisment
Advertisement

இதேபோல, டிசம்பர் 19 ஆம் தேதி, ப்ரவுனிகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், முட்டை மற்றும் முட்டை இல்லாத கிளாசிக் ப்ரவுனிகள், மெல்லும் ப்ரவுனிகள், வால்நட், வேர்கடலை, பட்டர் ஸ்காட்ச், கேரமெல், சாக்லேட், நியூடெல்லா, ராஸ்பெர்ரி வகை ப்ரவுனிகள், தேங்காய் ப்ரவுனிகள் போன்றவற்றை தயாரிக்க கற்றுக்கொடுக்கப்படும்.

மகளிர், மாணவர்கள், சுயஉதவிக் குழுவினர், இளைஞர்கள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment