10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு!

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டு தோறும் பொதுத்தேர்வு நடத்தப்படும். கடந்தாண்டிலிருந்து, 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்துவதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது, தமிழக பள்ளிக் கல்வித் துறை.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 12-ம் வகுப்பு தேர்வுகள் 2020-ம் ஆண்டு மார்ச் 2-ல் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் அடுத்தாண்டு ஏப்ரல் 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரையில், மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடையும் என்றும், மே 4-ம் தேதி இதன் முடிவுகள் வெளியாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு 11-ம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு, மே 14-ம் தேதி, இதன் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close