12 ஆம் வகுப்பு (HSE + 2) பொதுத்தேர்வு முடிவுகளுக்கான மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (DGE) இன்று வெளியிட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான - dge.tn.gov.in ல் இருந்து முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் படிக்க:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செயல்முறைக்குப் பிறகு மதிப்பெண்கள் மாற்றப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வெண்களின் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இருப்பினும், வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரு மாணவரின் தேர்வெண் இல்லை என்றால், அந்த மாணவர் பெற்ற மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அர்த்தம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.
12 ஆம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் தாளை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
படி 1 - அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - dge.tn.gov.in
படி 2 - "தேர்வு பற்றிய சமீபத்திய அறிவிப்பு" என்பதன் கீழ், முகப்புப் பக்கத்தில் "உயர்நிலைத் தேர்வு" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3 - HSE மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகளின் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 4 - அடுத்த தாவலில் நியமிக்கப்பட்ட புலத்தில் தேவையான சான்றுகளை உள்ளிடவும்
படி 5 – இப்போது திருத்தப்பட்ட முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.
படி 6 - எதிர்கால குறிப்புகளுக்கு முடிவுகளை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அசல் மதிப்பெண் பட்டியல் பின்னர் தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, +2 தேர்வு மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டது மற்றும் மே 6 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு 94.56 சதவீத தேர்ச்சியைப் பெற்றன. கூடுதலாக, 12 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 26,352 மாணவர்கள் குறைந்தது ஒரு பாடத்தில் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். அதேசமயம், பெண்கள் 96.44 சதவீத தேர்ச்சியும், ஆண்கள் 92.37 சதவீத தேர்ச்சியும் பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“