scorecardresearch

யு.பி.எஸ்.சி தேர்வு: தமிழகத்தை சேர்ந்த 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வாரிசுகள் சாதனை

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வாரிசுகள் சிறந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

Tamil Nadu: Children of three IAS officers crack 2022 UPSC exam Tamil News
2022 UPSC exam results tamil news

UPSC Exam Result Tamil News: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படும் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐ.ஏ.எஸ், 200 ஐ.பி.எஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி டி.ஜே.சத்ரியா கவின் இந்திய அளவில் 169வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசுச் செயலாளர் ஜெகந்நாதனின் மகள் ஆவார். இதேபோல், தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மைச் செயலாளரும், கமிஷனருமான அதுல் ஆனந்தின் மகள் ஈசானி 291வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் 361வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மகள் ஜீ ஜீ ஏஎஸ் (22) தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 5 தேதி நடைபெற்று முடிவுகள் ஜூன் 22 வெளியிடப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெற்றது. அதிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 6 ஆம் தேதி நேர்காணல் நடைபெற்று நேற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வாரிசுகள் சிறந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu children of three ias officers crack 2022 upsc exam tamil news

Best of Express