TN Board SSLC, HSE (+1) Result 2025 Highlights: மே 19-ந் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்

Tamil Nadu Board 10th, 11th Class Result 2025 Live Updates: தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் மதியம் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

Tamil Nadu Board 10th, 11th Class Result 2025 Live Updates: தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் மதியம் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
students

TN Board TNDGE SSLC, HSE +1 Result 2025 Live Updates: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகளை இன்று, மே 16, 2025 அன்று காலை 9:00 மணிக்கு வெளியிட உள்ளது. செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காலை 9:10 மணி முதல் தேர்வு முடிவுகளை பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.  

Advertisment

TN SSLC 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025ஐ எங்கே பார்ப்பது: தேர்வு எழுதிய மாணவர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது: மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மேற்குறிப்பிட்ட இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.'TN SSLC Result' மொபைல் செயலி மூலமாகவும் உங்கள் முடிவைப் பார்க்கலாம்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

Advertisment
Advertisements

செயலியைப் பதிவிறக்கி, தேர்வு முடிவு இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிடவும். அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களின் அளித்துள்ள மொபைல் எண்களுக்கு அனுப்பப்படும். 

தேர்ச்சி மதிப்பெண்கள்: TN SSLC தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.

  • May 16, 2025 17:43 IST

    மே 19-ந் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்

    10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 19-ந் தேதி முதல் தங்கள் பயின்ற பள்ளிகளில் இருந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 16, 2025 15:33 IST

    11-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் விவரம் வெளியீடு

    11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்



  • May 16, 2025 14:13 IST

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 6 மத்திய சிறைகள் 100% தேர்ச்சி

    6 மத்திய சிறைகள் 100% தேர்ச்சி. பாளையங்கோட்டை சிறைவாசி சக்திவேல், சேலம் சிறைவாசி கோபி ஆகிய இருவரும் அதிகபட்சமாக 412 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் 



  • May 16, 2025 13:38 IST

    இணையதள முகவரி

    தேர்வு முடிவுகளை மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் பின்வரும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்:

    www.tnresults.nic.in

    www.dge.tn.gov.in

    https://tnresults.nic.in



  • May 16, 2025 12:55 IST

    மு.க. ஸ்டாலின் பெருமிதம்!



  • May 16, 2025 11:58 IST

    "ஒரே மையத்தில் 167 பேர் 100\100 விசாரணை"

    ஒரே மையத்தில் +2 தேர்வெழுதிய 167 மாணவர்கள் வேதியியலில்  100 மதிப்பெண்கள் பெற்ற விவகாரம். சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் பணியில் ஈடுபட்ட தேர்வுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட  அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 



  • May 16, 2025 11:55 IST

    CBSE கட்டாய தேர்ச்சி ரத்து - அமைச்சர் விளக்கம்

    "சிபிஎஸ்இ 3,5,8ம் வகுப்புகளில் தோல்வியுறும் மாணவர்கள், மாநில பாடத் திட்டத்தில் அடுத்த வகுப்பில் சேர்க்கப்படுவார்களா? சிபிஎஸ்இ மாணவர்களை, மாநில பாடத் திட்டத்தில் சேர்ப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கியுள்ளார். 



  • May 16, 2025 11:44 IST

    492/500 மதிப்பெண் பெற்று மனைவி தேர்ச்சி

    சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சஞ்சனா 492/500 மதிப்பெண் எடுத்து அசத்தலாக தேர்ச்சி பெற்றுள்ளார். 



  • May 16, 2025 11:39 IST

    தவெக தலைவர் விஜய் வாழ்த்து

    "அடுத்தடுத்த வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள்" என்று 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



  • May 16, 2025 11:36 IST

    கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    "10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள். இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்" என்று முதல் ஸ்டாலின் தனது எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார். 



  • May 16, 2025 11:18 IST

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் தேர்வில் தேர்ச்சி

    மயிலாடுதுறை: கடந்த ஏப்ரல் 25 மேலையூர் உத்திராபதியார் கோவில் திருவிழாவில் இரும்பு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த மின்விளக்கில் மின் கசிவு ஏற்பட்டிருந்தது. அந்த மின்கசிவால் உயிரிழந்த 10ம் வகுப்பு மாணவன் தமிழ் துரை, இன்று வெளியான தேர்வு முடிவில் 313 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்



  • May 16, 2025 11:12 IST

    10ம் வகுப்பு பொதுத்தேரவு தேர்ச்சி விகிதத்தில் பின்னுக்குச் சென்ற சென்னை!

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சியில் 90.73% விகிதத்துடன் 34ம் இடத்தில் உள்ளது சென்னை. 



  • May 16, 2025 10:53 IST

    "கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது" - ஸ்டாலின்

    "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • May 16, 2025 10:38 IST

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அசத்திய சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவி!

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சைதாப்பேட்டை அரசுப் பள்ளி மாணவி தேஜஸ்வினி 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். 



  • May 16, 2025 10:37 IST

    “ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு”

    திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும்; அதில் மாற்றமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 



  • May 16, 2025 10:36 IST

    பிளஸ் 1 முடிவு- அரியலூர் முதல் இடம்

    11ஆம் வகுப்பு தேர்ச்சியில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 97.76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2ஆம் இடம் ஈரோடு-96.97%, 3ஆம் இடம் விருதுநகர் 96.23% தேர்ச்சி பெற்றுள்ளது. 



  • May 16, 2025 10:34 IST

    துணைத் தேர்வுகள் ஜூலை 4இல் நடைபெறும்

    10, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும். துணைத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு; மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19 முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்



  • May 16, 2025 10:14 IST

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்ற ஒட்டன்சத்திரம் மாணவன்!

    ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவன் மணீஷ் குமார் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  



  • May 16, 2025 09:38 IST

    எஸ்எஸ்எல்சி- அறிவியலில் 10,838 பேர் 100க்கு 100

    2025ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வில் பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

    • அறிவியல்: 10,838 பேர்
    • சமூக அறிவியல்: 10,256 பேர்
    • கணிதம்: 1,996 பேர்
    • ஆங்கிலம்: 346 பேர்
    • தமிழ்: 8 பேர்

    அறிவியல் பாடத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் மிகக் குறைவான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.



  • May 16, 2025 09:35 IST

    10ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம்!

    தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

    • மொத்த தேர்ச்சி விகிதம்: 93.80%
    • தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள்: 8,71,239
    • தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 8,17,261
    • தேர்ச்சி பெற்ற மாணவிகள்: 4,17,183 (95.88%)
    • தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 4,00,078 (91.74%)
    • மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மாணவர்களை விட அதிகம்.
    • 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை: 4,917. இதில் 1,867 அரசுப் பள்ளிகள்.
    • அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள்: சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி.
    • பாடவாரியாக தேர்ச்சி விகிதம்: தமிழ் (98.09%), ஆங்கிலம் (99.46%), கணிதம் (96.57%), அறிவியல் (97.90%), சமூக அறிவியல் (98.49%).
    • 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது.



  • May 16, 2025 09:34 IST

    10ம் வகுப்பு அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம் முதல் 5 மாவட்டங்கள்



  • May 16, 2025 09:30 IST

    டிஜிலாக்கரில் மதிப்பெண் சான்றிதழ்

    மாணவர்கள் தங்கள் டிஜிலாக்கர் கணக்கின் மூலமாகவும் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



  • May 16, 2025 09:30 IST

    பாடவாரியான அதிக மதிப்பெண்கள்

    அறிவியல் பாடத்தில் அதிக மாணவர்கள் (10,838 பேர்) 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.



  • May 16, 2025 09:29 IST

    100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

    4,917 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இதில் 1,867 அரசுப் பள்ளிகள் அடங்கும்.



  • May 16, 2025 09:27 IST

    10ம் வகுப்பு பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

    2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஒவ்வொரு பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது:

    • தமிழ்: 98.09%
    • ஆங்கிலம்: 99.46%
    • கணிதம்: 96.57%
    • அறிவியல்: 97.90%
    • சமூக அறிவியல்: 98.49%

    அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம் 96 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலம் அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தையும், கணிதம் குறைந்தபட்ச தேர்ச்சி விகிதத்தையும் கொண்டுள்ளது.



  • May 16, 2025 09:24 IST

    கடந்தாண்டை விட இந்தாண்டு 2.25% தேர்ச்சி விகிதம் அதிகம்

    தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.55% ஆக இருந்தது, இது 2025ஆம் ஆண்டு 93.80% ஆக உயர்ந்துள்ளது.  



  • May 16, 2025 09:20 IST

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09% தேர்ச்சி: அன்பில் மகேஸ்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார். 11-ம் வகுப்பில் 92.09% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவிகள் 95.13% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 88.70% பேர் தேர்ச்சியாகியுள்ளனர்.



  • May 16, 2025 09:20 IST

    11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிப்புகள் வெளியானது

    11 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளின் அறிவிப்புகள் வெளியானது. மதியம் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.



  • May 16, 2025 09:18 IST

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 1,867 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி!

    தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் (SSLC) 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், 1,867 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சி அடைந்துள்ளன.  



  • May 16, 2025 09:17 IST

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை மாவட்டம் முதலிடம்

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31 சதவீதம் பெற்றௌ சிவகங்கை முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை 98.31 சதவீதம் விருதுநகர் 97.45 சதவீதம் தூத்துக்குடி 96.76% கன்னியாகுமரி 96.66% திருச்சி 96.61%



  • May 16, 2025 09:14 IST

    பெண்கள் பள்ளிகள் அதிக தேர்ச்சி

    • பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம்:
      1. இருபாலர் பள்ளிகள்: 94.06%
      2. பெண்கள் பள்ளிகள்: 95.36%
      3. ஆண்கள் பள்ளிகள்: 87.84%
    • குறிப்பு: பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 7.52% அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22% அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.
    • பாடம் வாரியான 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை / தேர்ச்சி சதவீதம்:
    வரிசை எண் பாடங்கள் தேர்ச்சி சதவீதம் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
    1 தமிழ் 98.09% 8
    2 ஆங்கிலம் 99.46% 346
    3 கணிதம் 96.57% 1996
    4 அறிவியல் 97.90% 10838
    5 சமூக அறிவியல் 98.49% 10256

    சுருக்கமாக, பெண்கள் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவீதத்தையும், ஆண்கள் பள்ளிகள் குறைந்த தேர்ச்சி சதவீதத்தையும் பெற்றுள்ளன. பாடம் வாரியாகப் பார்க்கும்போது ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கணிதத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது.



  • May 16, 2025 09:12 IST

    கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகம்

    • 2024ஆம் ஆண்டு ஒப்பீடு: கடந்த மார்ச்/ஏப்ரல் 2024ஆம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,94,264. தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,18,743. தேர்ச்சி சதவீதம் 91.55%.
    • தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கடந்த ஆண்டு தேர்ச்சியை விட இந்த ஆண்டு 2.25% தேர்ச்சி சதவீதம் கூடுதலாக உள்ளது.
    • பள்ளிகளின் எண்ணிக்கை:
      • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை: 12,485
      • மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 7,555
      • உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 4,930
    • 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: மொத்தம் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் மட்டும் 1,867 ஆகும்.
    • பள்ளிகள் வாரியான தேர்ச்சி சதவீதம்:
      1. அரசுப் பள்ளிகள்: 91.26%
      2. அரசு உதவி பெறும் பள்ளிகள்: 93.63%
      3. தனியார் சுயநிதிப் பள்ளிகள்: 97.99%

    சுருக்கமாக, 2025ஆம் ஆண்டு SSLC தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் சுயநிதிப் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவீதத்தையும், அரசுப் பள்ளிகள் குறைந்த தேர்ச்சி சதவீதத்தையும் பெற்றுள்ளன. மேலும், 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.



  • May 16, 2025 09:11 IST

    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேர்ச்சி சதவீதம் 93.80 சதவீதம்

    தமிழ்நாடு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு (SSLC) மார்ச்/ஏப்ரல் 2025 தேர்வு முடிவுகள் இன்று (16.05.2025) வெளியிடப்பட்டுள்ளன.

    • தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது.
    • மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4,35,119 பேர் மாணவிகளும், 4,36,120 பேர் மாணவர்களும் ஆவர்.
    • மொத்த தேர்ச்சி சதவீதம் 93.80% ஆகும். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,17,261.
    • மாணவிகள் 95.88% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளின் எண்ணிக்கை 4,17,183.
    • மாணவர்கள் 91.74% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,00,078.
    • மாணவர்களை விட 4.14% அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 15,652.

    ஆக, 2025 SSLC தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 16, 2025 09:10 IST

    மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி

     2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு SSLC தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாக அதிக தேர்ச்சி சதவீதத்தைக் காட்டுகின்றன. இதில் மாணவர்களை விட மாணவியர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 16, 2025 09:10 IST

    தேர்ச்சி சதவீதம்

    • தேர்வு நடைபெற்ற நாட்கள்: 28.03.2025 முதல் 15.04.2025 வரை
    • தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாள்: 16.05.2025
    • தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை: 8,71,239
    • மாணவியர்களின் எண்ணிக்கை: 4,35,119
    • மாணவர்களின் எண்ணிக்கை: 4,36,120
    • தேர்ச்சி பெற்றவர்கள் (மொத்தம்): 8,17,261 (93.80%)
    • தேர்ச்சி பெற்ற மாணவியர்: 4,17,183 (95.88%)
    • தேர்ச்சி பெற்ற மாணவர்கள்: 4,00,078 (91.74%)
    • குறிப்பு: மாணவர்களை விட 4.14% அதிகமான மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • தேர்வுக்கு வருகை புரியாதவர்கள்: 15,652

    சுருக்கமாக, 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு SSLC தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாக அதிக தேர்ச்சி சதவீதத்தைக் காட்டுகின்றன. இதில் மாணவர்களை விட மாணவியர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.



  • May 16, 2025 09:06 IST

    ரிசல்ட் வெளியானது

    தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்ச்சி விகிதம் - 93.80% ஆகும்.



  • May 16, 2025 08:40 IST

    தேர்வு முடிவுகளுக்குப் பிறகு என்ன செய்வது?

    தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் சில நாட்களில் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தங்கள் மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் விடைத்தாளின் நகலைப் பெறலாம். இது தொடர்பான விவரங்கள் தேர்வு முடிவு அறிவித்த பிறகு TNDGE ஆல் வெளியிடப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் அல்லது ஜூலை 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    TN SSLC 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2025 தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.



  • May 16, 2025 08:40 IST

    தேர்ச்சி முறை

    TN SSLC தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 100க்கு 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதில் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.



  • May 16, 2025 08:39 IST

    10 ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம் முதல் ரிசல்ட் வெளியானது வரை உள்ள முக்கிய தேதிகள்

    TN SSLC தேர்வு தேதிகள்: மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை
    TN SSLC தேர்வு முடிவு 2025 தேதி: மே 16, 2025
    TN SSLC தேர்வு முடிவு 2025 நேரம்: காலை 9:00 மணி (செய்தியாளர் சந்திப்பு மூலம் அறிவிப்பு), காலை 9:10 மணி (இணையதளங்களில் இணைப்பு செயல்படும் நேரம்)
    செய்முறை தேர்வுகள்: பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28, 2025 வரை



  • May 16, 2025 08:38 IST

    செய்தியாளர் சந்திப்பு விவரங்கள்

    TN SSLC தேர்வு முடிவுகள் 2025ஐ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் காலை 9:00 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் அறிவிப்பார். தேர்வு முடிவுகளுடன், தேர்ச்சி சதவீதம், பாலின வாரியான தேர்ச்சி விவரங்கள் மற்றும் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம் போன்ற கூடுதல் தகவல்களும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     



  • May 16, 2025 08:24 IST

    தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம்: அன்பில்

    கற்றல் கற்பித்தல் இரண்டிற்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்க்கொள்வோம். தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.



  • May 16, 2025 08:13 IST

    தேர்வு முடிவுகளைப் பார்க்க பிற வழிகள்

    • மொபைல் செயலி: 'TN SSLC Result' மொபைல் செயலி மூலமாகவும் உங்கள் முடிவைப் பார்க்கலாம். செயலியைப் பதிவிறக்கி, தேர்வு முடிவு இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிடவும்.
    • எஸ்எம்எஸ்: இணையதளங்கள் அதிகப்படியான போக்குவரத்தால் செயலிழந்தால், எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிவுகளைப் பெறலாம். இதற்கான விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கிடைக்கும்.
    • டிஜிலாக்கர்: டிஜிலாக்கர் செயலி அல்லது இணையதளம் மூலமாகவும் உங்கள் முடிவுகளை அணுகலாம். மதிப்பெண் சான்றிதழைப் பெற உங்கள் ஆதார் எண்ணை உங்கள் டிஜிலாக்கர் கணக்குடன் இணைக்க வேண்டியிருக்கலாம்.



  • May 16, 2025 07:50 IST

    தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பதற்கான பொதுவான வழிமுறைகள்

    மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். "SSLC தேர்வு முடிவுகள் மே 2025" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை சரியான வடிவத்தில் உள்ளிடவும். "சமர்ப்பி" (Submit) பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் TN 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2025 திரையில் காட்டப்படும். பின்னர் நீங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலை எடுத்துக்கொள்வது நல்லது.



  • May 16, 2025 07:49 IST

    தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது

    TN SSLC தேர்வு முடிவுகள் 2025ஐ பார்க்க மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி (DD/MM/YYYY வடிவில்) ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.



  • May 16, 2025 07:49 IST

    TN SSLC 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025ஐ எங்கே பார்ப்பது

    தேர்வு எழுதிய மாணவர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம்:

    • டிஎன் ரிசல்ட்ஸ்: tnresults.nic.in
    • அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE), தமிழ்நாடு: dge.tn.gov.in
    • டிஜிலாக்கர் 



  • May 16, 2025 07:49 IST

    10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

    தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகளை இன்று, மே 16, 2025 அன்று காலை 9:00 மணிக்கு வெளியிட உள்ளது. செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காலை 9:10 மணி முதல் தேர்வு முடிவுகள் பார்க்கக் கிடைக்கும்.



10th Exam Exam Result

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: