Advertisment

தமிழக கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 2257 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
tn govt jobs

தமிழக கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 2257 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடங்களின் விவரம்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை -  2257

அரியலூர் - 28

செங்கல்பட்டு - 73

கோவை – 110

சென்னை – 132

திண்டுக்கல் – 67

ஈரோடு – 73

காஞ்சிபுரம் – 43

கள்ளக்குறிச்சி – 35

கன்னியாகுமரி – 35

கரூர் – 37

கிருஷ்ணகிரி – 58

மயிலாடுதுறை – 26

நாகப்பட்டினம் – 8

நீலகிரி – 88

ராமநாதபுரம் - 112

சேலம் – 140

சிவகங்கை – 28

திருப்பத்தூர் – 48

திருவாரூர் – 75

தூத்துக்குடி – 65

திருநெல்வேலி – 65

திருப்பூர் – 81

திருவள்ளூர் – 74

திருச்சி – 99

ராணிப்பேட்டை – 33

தஞ்சாவூர் – 90

திருவண்ணாமலை – 76

கடலூர் – 75

பெரம்பலூர் – 10

வேலூர் – 40

விருதுநகர் – 45

தருமபுரி – 28

மதுரை – 75

நாமக்கல் – 77

புதுக்கோட்டை – 60

தென்காசி – 41

தேனி – 48

விழுப்புரம் - 47

கல்வி தகுதி: இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடிந்தால் விண்ணப்பிக்கலாம்.

கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி/ பி.சி.எம் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம்: கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வ மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 24.12.2023

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ. 500

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும். உதாரணமாக சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கான அறிவிப்பை தெரிந்துக் கொள்ள https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/32_Notification_1.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment