/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 32 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். அதேநேரம் தமிழக அரசு விதிகளின்படி, பி.சி, எம்.பி.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Advocate General of Tamil Nadu, High Court Chennai - 600104
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.