தமிழ்நாடு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொள்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் தொடக்க கல்வி பட்டயத் தேர்வுகள் (TN DEE) கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு எழுதிய முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும் தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் 27.09.2023 அன்று தெரிந்துக் கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாணவர்கள் தங்கள் விடைதாள்களை மறுகூட்டல் செய்யவும், ஒளி நகல் (Scan Copy) பெறவும் விண்ணப்பிக்க விரும்பினால் https://apply1.tndge.org/dge-notification/DEE என்ற இணையதளப் பக்கத்தில் DEE EXAM JUNE / JULY 2023 – Re-Totalling-I & Scan Copy என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் அதில் தோன்றும் பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு, அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள, கட்டணத் தொகையை கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி, ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்: 03.10.2023 முதல் 05.10.2023
விடைத்தாட்களின் ஒளிநகல் வேண்டி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டுமே பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். தற்போது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால், பின்னர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்
விடைத்தாள் ஒளிநகல் : ரூ. 275 (ஒரு பாடத்திற்கு)
மறுகூட்டல் : ரூ. 205 (ஒரு பாடத்திற்கு)
தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“