scorecardresearch

TNPSC Group 2, Group 4: கட்டாய தமிழ் தாள்; மாதிரி வினா வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

Tamilnadu Education Update : தமிழகத்தில் அரசு வேலை தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டது

TNPSC Group 2, Group 4: கட்டாய தமிழ் தாள்; மாதிரி வினா வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

Tamilnadu TNPSC Update In Tamil : தமிழகத்தில் அரசு வேலை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வவாணையம் நடத்தும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். குருப் 1 குருப் 2 குருப் 4 என்ற வகையில் நடத்தப்படும் இந்த தேர்வை லட்சக்கணக்காக மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் எழுதி வருகினறனர். ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த தேர்தவு கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடத்தப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் அடுத்த (2022) ஆண்டுக்காக திட்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் அடுத்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் குருப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அறிவிப்பு வெளியாகி அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தமிழில் தாளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தமழ் தேர்தவில் குறைந்த பட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தாளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வரின் மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும், தமிழ் தாளிலில் தோல்வியடைந்தால்,மற்ற தாள்கள் திருத்துவதற்கு கணக்கில் எடுத்துக்ககொள்ளப்படாது என்று அறிவி்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு வேலை தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வினாத்தாளை தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu education tnpsc released sample question paper for group 4

Best of Express