அகில இந்திய தொழிற்தேர்வு; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

ஐ.டி.ஐ தனித்தேர்வர்கள் அகில இந்திய தொழிற்தேர்வில் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்; தேர்வு குறித்த விபரங்களை வெளியிட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை

ஐ.டி.ஐ தனித்தேர்வர்கள் அகில இந்திய தொழிற்தேர்வில் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்; தேர்வு குறித்த விபரங்களை வெளியிட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை

author-image
WebDesk
New Update
polytechinc students

அகில இந்திய தொழிற்தேர்வு வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் தனித் தேர்வர்களாக பங்கேற்க தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழிற்தேர்வு வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் தனித் தேர்வர்களாக பங்கேற்க தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் ரூ.200 மற்றும் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 ஆம் தேதி ஆகும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

Advertisment
Advertisements

தகுதியுள்ள நபர்களுக்கு சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவம்பர் 4 ஆம் தேதி அன்று முதல்நிலைத் தேர்வின் கருத்தியல் (தியரி) தேர்வும், 5 ஆம் தேதி செய்முறைத் தேர்வும் நடைபெறும். இந்த தேர்வுகளுக்கான முழு வழிகாட்டுதல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

exam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: