தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பொறியியல் கவுன்சிலிங்கிற்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் எப்படி இருக்கும் என கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு இயற்பியல் சற்று கடினமாக இருந்ததால் சென்டம் 700- 720க்குள் இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் வேதியியல் மிதமானதாக இருந்ததால் சென்டம் 4800 - 5000க்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. கணித தாள் எளிதாக இருந்ததால், சென்டம் 1000 - 1500க்கும் அதிகமாக வர வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப்பில் 195க்கு மேல் 2300க்கு அதிகமானோர் உள்ளனர். இதனால் கட் ஆஃப் 0.48 - 0.5 குறைய வாய்ப்புள்ளது. 190க்கு மேல் 9600க்கும் அதிகமானோர் எடுக்க வாய்ப்புள்ளது. எனவே கட் ஆஃப் 1.64 அதிகரிக்க வாய்ப்புள்ளது.
180 – 190க்குள் 15000 – 17000 பேர் வரலாம் என்பதால் 3.5 2 கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 170 - 179க்குள் 18000 – 19000 பேர் இருக்கலாம் என்பதால் 9.65 கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 150-169க்குள் 20000 – 22000 பேர் வரலாம் என்பதால் 13.2 கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 120- 149க்குள் 10000- 11000 பேர் வரலாம் என்பதால் 8.16 கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 80- 119க்குள் 5000 – 8000 பேர் வரலாம் என்பதால் 3.86 கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“