பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் தலைசிறந்த கல்லூரியில் படிக்க விரும்புபவர். அதிலும், அந்த தலைசிறந்த கல்லூரியில் இலவசமாக படிக்கலாம் என்றால், எப்படி இருக்கும். அது எந்தக் கல்லூரி? இலவச படிப்புக்கான சீட்டை எப்படி பெறுவது? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதன்மை கல்லூரியாக விளங்கி வருவது எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி ஆகும். தனியார் கல்லூரிகளில் முதலில் சீட் நிரம்பும் கல்லூரி இது தான். இந்தக் கல்லூரியில் இலவசமாக பொறியியல் படிக்கலாம். அது எப்படி என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
எஸ்.எஸ்.எஸ் கல்லூரியில் படித்தால் நிச்சயம் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்தக் கல்லூரியில் இலவசமாக படிக்க, எஸ்.எஸ்.என் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, அனைத்து தகவல்களையும் நிரப்பி சமர்பிக்க வேண்டும்.
முதல் விண்ணப்பத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும். அடுத்ததாக இரண்டாம் படிவத்தில் அரசுப் பள்ளியில் படித்து அந்தப் பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
அடுத்ததாக மூன்றாவது விண்ணப்பப் படிவத்தில் உங்கள் கல்வி விவரங்கள் குறித்த தகவல்களை நிரப்பி சமர்பிக்க வேண்டும். அடுத்ததாக நீங்கள் படித்த அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், நீங்கள் முதல் மாணவர் என்று வழங்கக் கூடிய கடிதம் சமர்பிக்கப்பட வேண்டும்.
அனைத்து படிவங்களையும் நிரப்பி, எஸ்.எஸ்.என் கல்லூரியின் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம் கிராமபுற அரசுப் பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.என் கல்லூரியில் 4 வருடமும் இலவசமாக கல்வி கற்கும் வாய்ப்பை பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“