தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை படிக்க டாப் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் தொடங்கும். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் அதிகம் விரும்புவது கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் தான். அதிலும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், மெசின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசினஸ் சிஸ்டம்ஸ் போன்ற படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்களை படிக்க டாப் கல்லூரிகள் எவை என்பதை, கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விவரித்துள்ளார். அவர் இந்த கல்லூரிகளை உள்கட்டமைப்பு, தரவரிசை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்.
1). அண்ணா பல்கலைக்கழக வளாக கிண்டி பொறியியல் கல்லூரி (சி.இ.ஜி கேம்பஸ்), சென்னை
2). அண்ணா பல்கலைக்கழக வளாக மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி கேம்பஸ்), சென்னை
3). ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் (எஸ்.எஸ்.என் காலேஜ்), செங்கல்பட்டு
4). பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
5). ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
6). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோயம்புத்தூர்
7). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
8). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்
9). கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
10). அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்
11). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
12). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர்
13). பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு
14). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
15). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“