தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் திட்ட உதவியாளர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.08.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Project Associate
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 68,400
Senior Accountants
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B. Com/ B.A. Commerce/Accountancy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 68,400
Personal Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 28,500
வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdLM2Ed5NbmBoBGOYS7k7FUCAqOuoCdQtVAUkjOfhVDhtVFQA/viewform என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.08.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.