தமிழக அரசின் கலை பண்பாட்டு இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சுருக்கெழுத்து தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 62,000
தட்டச்சர்
யிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 62,000
இளநிலை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 19,500 – 62,000
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 15,700 – 50,000
வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600028.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.01.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“