தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி, “இந்திய மாநிலங்களின் வளர்ச்சி, பொதுச் செலவுகள் மற்றும் வருவாய் மீதான பரிமாற்றங்களின் விளைவுகள்” என்ற ஆய்வுக் கட்டுரைக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: அடுக்குமாடி குடியிருப்பு பதிவு கட்டணம் இரு மடங்கு உயர்வு; பதிவுத்துறை தகவல்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் தலைமை செயலாளர் சண்முகமும் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பட்டங்களை வழங்கினார்.
1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குழுவைச் சேர்ந்த சண்முகம், 2019 இல் தலைமைச் செயலாளராக ஆனார் மற்றும் ஜூலை 2020 இல் ஓய்வு பெற்றார். சண்முகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருளியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர்.
இந்தநிலையில், சண்முகம் 2019 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முனைவர் பட்டத்திற்காகப் பதிவு செய்தார். தற்போது அவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
“தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் இயக்குனர் மற்றும் பேராசிரியர் கே.ஆர். சண்முகத்தின் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டத்தை முடித்தேன்," என்று சண்முகம் கூறினார்.
இதேபோல், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (வி.ஐ.டி) துணைத் தலைவரான ஜி.வி. செல்வம், “இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கான சிறப்புக் குறிப்புடன் இந்தியாவில் உயர்கல்வியின் மதிப்பீடு” என்ற ஆய்வறிக்கைக்காக டாக்டர் பட்டம் பெற்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil