/indian-express-tamil/media/media_files/gxVQQvUvnoJAbHiRujJk.jpg)
Tamil Nadu government competitive exams six months free coaching
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி., ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போட்டித் தேர்வுகளுக்கான 6 மாத கால இலவச பயிற்சிக்கு இன்று (செப்.10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி., ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தமிழகத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வர்களுக்காக தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 பேருக்கும் மற்றும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 6 மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது.
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 1-1-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக இன்று (செப்.10) முதல் செப். 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 044 - 25954905 மற்றும் 044 - 28510537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும், என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us