தமிழக அங்கன்வாடி வேலை வாய்ப்பு; 7783 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன?

தமிழக அரசின் அங்கன்வாடி பணியாளர் வேலை வாய்ப்பு; 7783 பணியிடங்கள்; கல்வி, வயதுத் தகுதிகள், சம்பளம், தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுத் தகவல்கள் இங்கே

தமிழக அரசின் அங்கன்வாடி பணியாளர் வேலை வாய்ப்பு; 7783 பணியிடங்கள்; கல்வி, வயதுத் தகுதிகள், சம்பளம், தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுத் தகவல்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் இனி அங்கன்வாடி மையங்களில் இயங்கும்: அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியளார் பணியிடங்களில் நேரடி பணி நியமனம் மூலம் 7783 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் 25.04.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Advertisment

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலகங்களின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், குறு அங்கன்வாடி பணியிடங்கள் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் பெண்களைக் கொண்டு மட்டுமே நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

காலியிடங்களின் விபரம்

அங்கன்வாடி பணியாளர் 

Advertisment
Advertisements

காலியிடங்களின் எண்ணிக்கை – 3,886

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

வயதுத் தகுதி: 01.04.2025 இன்படி 25 வயது முதல் 35 வயது வரையுடையோர் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத் திறனாளிகள் 25 வயது முதல் 38 வயது வரையும், விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர் 25 முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: பணி நியமனத்திலிருந்து ஓராண்டிற்குள் தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு பணியாளருக்கு ரூ. 7,700 வழங்கப்படும். பின்னர் 12 மாதங்கள் முடிந்த பின்னர் (நிலை 4) ரூ. 7,700 – 24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.

குறு அங்கன்வாடி பணியாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை – 305

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

வயதுத் தகுதி: 01.04.2025 இன்படி 25 வயது முதல் 35 வயது வரையுடையோர் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத் திறனாளிகள் 25 வயது முதல் 38 வயது வரையும், விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர் 25 முதல் 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: பணி நியமனத்திலிருந்து ஓராண்டிற்குள் தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு ரூ. 5,700 வழங்கப்படும். பின்னர் 12 மாதங்கள் முடிந்த பின்னர் (நிலை 3) ரூ. 5,700 – 18,000 என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.

அங்கன்வாடி உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை – 3,592

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் தமிழ் சரளமாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

வயதுத் தகுதி: 01.04.2025 இன்படி 20 வயது முதல் 40 வயது வரையுடையோர் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத் திறனாளிகள் 20 வயது முதல் 43 வயது வரையும், விதவைகள் / ஆதரவற்ற பெண்கள் / எஸ்.சி / எஸ்.டி வகுப்பினர் 20 முதல் 45 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: பணி நியமனத்திலிருந்து ஓராண்டிற்குள் தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு ரூ. 4,100 வழங்கப்படும். பின்னர் 12 மாதங்கள் முடிந்த பின்னர் (நிலை 2) ரூ.4,100 – 12,500 என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய விண்ணப்பத்தினை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 09.04.2025 முதல் 25.04.2025 வரை சம்பந்தப்பட்ட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்தல் வேண்டும். 

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்பட வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய்/ தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (குள்ளத்தன்மையுடையவர், தொழு நோயிலிருந்து குணமடைந்தவர் (40% No deformity in upper limbs with intact sensory and motor components) அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்க வேண்டும். மேலும் அரசு வழிகாட்டுதலின்படி நேர்காணலுக்கு அழைக்கப்படும் தகுதியான நபர்கள் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும். 

Jobs Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: