கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சமையலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,700 – 58,100
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (பொ) அலுவலகம், 219, பந்தய சாலை, கோயம்புத்தூர் - 18.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“