தமிழகம் முழுவதும் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 6178 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் 29.04.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் முதலில் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட்டு, ஓராண்டுக்குப் பின்னர் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
சமையல் உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை – 6178
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 21 வயது முதல் 40 வயது வரையுடையோர் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: பணி நியமனத்திலிருந்து ஓராண்டிற்கு தொகுப்பூதியம் வழங்கப்படும். பின்னர் 12 மாதங்கள் முடிந்த பின்னர் (நிலை 1) ரூ. 3000 – 9000 என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ நகராட்சி/ மாநகராட்சி அலுவலங்களில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.04.2025
விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய்/ தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (தேவைப்படின்) உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். மேலும் அரசு வழிகாட்டுதலின்படி நேர்காணலுக்கு அழைக்கப்படும் தகுதியான நபர்கள் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.