தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் காலியாக உள்ள அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Senior Scientist and Head
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி Doctoral degree in Agriculture படித்திருக்க வேண்டும். மேலும் 8 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
Stenographer (Grade-III)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnbrdngo.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, No.359,Kilnelli village, Chithathur Post, Vembakkam Taluk, Thiruvannamalai District –604410, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnbrdngo.org/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“