சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கௌரி அண்மையில் ஓய்வு பெற்றார். இதனையடுத்து துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த தேர்வுக் குழுவின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தனியாக ஒரு அமைத்து அறிவித்தார். இந்த குழுவை ஏற்கபோவதில்லை என தமிழக அரசு அறிவித்தது.
இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அமைத்து அரசிதழில் அறிவித்துள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தமிழக அரசு தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில், கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில், 3 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மற்றும் வரலாற்றுத்துறை தலைவர் ஜெகதீசன் ஆகிய இருவரும் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களாக உள்ளனர். யு.ஜி.சி பிரதிநிதியை நிராகரித்து தமிழக அரசு தனியாக தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு புதிய குழுவை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“