தமிழகத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர்க்கைக்கு ஜூன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் அமுதவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ) இயங்கி வருகின்றன. மேலும் 3305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஐ.டி.ஐ.,க்களில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு ஐ.டி.ஐ-யில் சேர 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 10 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் 136 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் 94990 55689 என்ற செல்போன் எண் வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பம் ஆரம்பம் – 10.05.2024
விண்ணப்பம் முடிவு – 07.06.2024
சான்றிதழ் சரிபார்ப்பு – 10.06.2024
தரவரிசை பட்டியல் – 12.06.2024
தற்காலிக ஒதுக்கீடு – 14.06.2024
இறுதி ஒதுக்கீடு – 14.06.2024 – 19.06.2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“