Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிப்ளமோ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
MRB Recruitment 2019, Medical Jobs 2019, தமிழ்நாடு அரசு செவிலியர் பணியிடம்

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 60,000 

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : GNM or B.Sc (Nursing) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000 

பல்நோக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multipurpose Health Worker/ Health Inspector/ Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/03/2024030842.pdf  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், செங்கல்பட்டு மாவட்டம் - 603001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2024/03/2024030818.pdf  இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment