Advertisment

சென்னை செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலை வாய்ப்பு; 7 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
tn govt jobs

சென்னை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணி மண்டபங்களில் நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

நூலகர் மற்றும் காப்பாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Certificate In Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 2500 – 5000 +500

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபம், சர்தார் வல்லபாய் படேல் ரோடு, கிண்டி, சென்னை - 600022

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment