/indian-express-tamil/media/media_files/adPP7g9rd43v9sSnoID0.jpg)
சென்னை குடிநீர் வடிகால் வாரிய வேலை வாய்ப்பு
சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 76
Civil Engineering / Mechanical Engineering – 52
Electrical and Electronics Engineering – 24
கல்வித் தகுதி: 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: 9000
Technician (Diploma) Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 32
Civil Engineering – 10
Electrical and Electronics Engineering – 22
கல்வித் தகுதி: 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: 8000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nats.education.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து, பின்னர் CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD என்ற இணைப்பில் சென்று விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற http://boat-srp.com/wp-content/uploads/2024/10/CMWSSBNotification_2024_25.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.