கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Legal Aid Defense Counsel
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: குற்றவியல் வழக்கறிஞராக 1-3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Office Peon (Attendant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://coimbatore.dcourts.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Coimbatore – 641018.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://coimbatore.dcourts.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“