கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை: 26
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,800
Dental Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Dental Technology படித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,600
இயன்முறை மருத்துவ நிபுணர் (Physiotherapist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor of Physiotherapist படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/05/2025052233.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் - 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.