கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சமூகப் பணியாளர் (Social Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: பி.ஏ சமூக அறிவியல்/ சமூகப் பணி/ சமூகவியல் படித்திருக்க வேண்டும். கணினி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 1,8536
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cuddalore.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண் 312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cuddalore.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“