கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors/ Masters degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
Special Educator for Behavioural Theraphy
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors/ Masters degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
Audiologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors degree in speech and Language pathology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2025/06/2025061884.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 05, பீச் ரோடு, கடலூர் - 607001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.