தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
STLS
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Diploma or Certificate course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
TB HV
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,300
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dharmapuri.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: துணை இயக்குனர், மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், குப்பூர், தருமபுரி - 636704
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://dharmapuri.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“