தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
District Quality Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Hospital Administration/ Public Health/ Health Management படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
Dental Surgeon
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Dental Hygienist Course படித்திருக்க வேண்டும் அல்லது 2 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,395
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023110652.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : செயற் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், தருமபுரி - 636705
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.11.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023110691.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“