தமிழ்நாடு அரசின் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நிரந்தர முழுநேரக் காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,700 – 58,100
தூய்மைப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,700 – 58,100
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,700 – 58,100
தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : இயக்குநர், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600006
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“