ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் கணக்காளர், சமூகப் பணியாளர், புறத்தொடர்பு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கணக்காளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை வணிகவியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் அவசியம்
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,536
சமூகப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,536
புறத்தொடர்பு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,592
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2024/11/2024110562.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, Additional Building – 6th Floor Collector Office Erode – 638011
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2024/11/2024110562.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“