சுகாதாரத் துறை வேலை; டிப்ளமோ, டிகிரி தகுதி; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 6 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி தகுதி; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 6 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி தகுதி; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
hospital worker

ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Haemoglobinopathy Counsellor 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors degree in Sociology / Psychology / Social Work / Diploma in GNM / B.Sc Nursing படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 18,000

Special Educator for Behavioural Therapy

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors /Master's degree in Special Education in Intellectual Disability  படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,000

Audio Metric Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Hearing Language and Speech (DHLS) படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 17,250

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc.Radiography படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 13,300

Siddha - Therapeutic Assistant (Male)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma Nursing Therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://erode.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638012

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Cuddalore Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: