தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கணினி இயக்குனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சிறப்பு ஆசிரியர் (தமிழ்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: முதுகலை தமிழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 27,000
மொழிப்பெயர்ப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: முதுகலை ஆங்கிலம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
கணினி இயக்குனர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: கணினி இயக்குவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: 12,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை இயக்குனர் (வெளியீடு) செய்தி மக்கள் தொடர்பு துறை, தமிழரசு அலுவலகம், எண்:5 ராஜீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை - 600113
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“