சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 276 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 276 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hospital worker

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

உணவியல் நிபுணர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc degree in Food Service Management and Dietetics or Foods and nutrition or Food Science and Nutrition or Home Science with Nutrition and Dietetics as major or Home Science Emerging Technology, Food Service Management and Dietetics படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

சம்பளம்: ரூ. 15,000

ஆய்வக நுட்புநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Anaesthesia Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

பல் சுகாதார நிபுணர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma in Dental Hygienist படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000

ஈ.சி.ஜி தொழில்நுட்ப வல்லுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Electro Cardiogram or Treadmill Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

அறுவை அரங்கு நுட்புனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Theatre Technician படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000 

லிஃப்ட் மெக்கானிக்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

ஏ.சி மெக்கானிக்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Refrigeration and Air conditioning Technician பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc. in Medical Lab Technology (Cyto Pathology) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

ஸ்டெர்லைஷேசன் ஆப்ரேட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Diploma in Hospital Sterilisation Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

தொழில்சார் சிகிச்சையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Bachelor Degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

மருந்தாளுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

சமூக சேவகர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு MSW படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

கொதிகலன் மெக்கானிக்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: A degree or Diploma in Mechanical or Electrical or Chemical or Power Plant or Production or Instrumentation Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

ஹவுஸ் கீப்பர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000 

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000 

தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma /Degree (ECE/IT/CS/ B.sc (CS)/BCA படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

ரத்த வங்கி ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master's Degree in Medical Psychology படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Anaesthesia Technician படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

ரோடியோகிராபர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: Dip.in Radio Diagnosis Technician படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

பிசியோதெரபிஸ்ட்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Bachelor Degree in Physiotherapy (BPT) படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

எலக்ட்ரீசியன் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrician/ Wireman பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 12,000 

செவிலிய உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் MPHW படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 12,000 

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 12,000 

நாவிதன்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000 

சலவையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000 

மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 15,000 

சுகாதாரப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 10,250 

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 45

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 10,250 

மருத்துவமனைப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 10,250 

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 10,250 

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், 42A இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் - 631501 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Kancheepuram Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: